ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி மகளிர் ஹெப்டத்லான்: 72 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்றார் ஸ்வப்னா பர்மன்

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹெப்டத்லான் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 6026 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹெப்டத்லான் பிரிவு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது. ஹெப்டத்லான் என்பது 100மீ ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் உட்பட 7 தடகள போட்டிகளை உள்ளடக்கியது.  

இதில், இந்திய வீராங்கனை ஸ்வப்னா பெற்ற புள்ளி விவரங்கள்:

100 மீட்டர் ஓட்டப்பந்தயம் - 5-ஆவது இடம் பிடித்து 981 புள்ளிகள்

உயரம் தாண்டுதல் - முதலிடம் பிடித்து 1003 புள்ளிகள்

குண்டு எறிதல் - 2-ஆவது இடம் பிடித்து 707 புள்ளிகள்

200 மீட்டர் ஓட்டப்பந்தயம் - 7-ஆவது இடம் பிடித்து 790 புள்ளிகள் 

நீளம் தாண்டுதல் - 2-ஆவது இடம் பிடித்து 865 புள்ளிகள் 

ஈட்டி எறிதல் - முதலிடம் பிடித்து 872 புள்ளிகள்

800 மீட்டர் ஓட்டப்பந்தயம் - 4-ஆவது இடம் பிடித்து 808 புள்ளிகள் 

இதன்மூலம், அவர் மொத்தம் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

சீனா வீராங்கனை க்விங்கிலின் வாங் 5954 புள்ளிகள் பெற்று வெள்ளி மற்றும் ஜப்பான் வீராங்கனை யுகி யமாசகி 5873 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான பூர்ணிமா ஹெம்ப்ராம் 5837 புள்ளிகள் பெற்று 4-ஆவது இடத்தை பிடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT