ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி 4*400மீ தொடர் ஓட்டம்: இந்திய மகளிருக்கு தங்கம், ஆடவருக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4*400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கமும், ஆடவர் அணி வெள்ளிப் பதக்கமும் வென்றது. 

DIN

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4*400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கமும், ஆடவர் அணி வெள்ளிப் பதக்கமும் வென்றது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் மற்றும் ஆடவர் 4*400மீ தொடர்  ஓட்டப்பந்தயம் இறுதிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. 

மகளிர் 4*400மீ தொடர் ஓட்டப்பந்தயம்:

இதில், இந்திய அணி சார்பாக ஹீமா தாஸ், பூவம்மா ராஜூ மச்சேத்திரா, சரிதாபென் லக்ஷ்மன்பாய் காயக்வாட், விஸ்மாயா வெல்லுவா கோரோத் ஆகியோர் பங்கேற்றனர். 

இவர்கள் 3:28.72 நிமிட நேரத்தில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தது. இதன்மூலம், இவர்கள் இந்தியாவுக்கு 13-ஆவது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தனர். 

ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டப்பந்தயம்:

இதில், இந்தியா சார்பில் குன்ஹூ முகமது புத்தன்புரக்கல், தருண் அய்யாசாமி, முகமது அனாஸ் யாஹியா, ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள், வெற்றி இலக்கை 3:01.85 நிமிட நேரத்தில் அடைந்து 2-ஆவது இடம் பிடித்தனர். இதன்மூலம், இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.  

ஆசியப் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT