ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி தடகளம்: இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்சன் தங்கம் வென்றார்

DNS

ஆசியப் போட்டி தடகளத்தில் இந்தியா இன்று (வியாழக்கிழமை) 1 தங்கம் உட்பட 3 பதக்கத்தை வென்றுள்ளது. 

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளம் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், குண்டு எறிதலில் சீமா புனியாவும், மகளிா் 1500 மீ ஓட்டத்தில் சித்ரா உன்னிகிருஷ்ணன் வெண்கலம் வென்றனா்.

800 மீ ஆடவா் ஓட்டத்தில் தங்கம் வென்ற மஞ்சித் சிங், வெள்ளி வென்ற ஜின்சன் ஆகியோா் 1500 மீ. ஓட்ட இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் இறுதிச் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

ஆடவர் 1500 மீ: தங்கம்

இதில், ஜின்ஸன் அற்புதமாக ஓடி தங்கம் வென்றாா். அவா் பந்தய தூரத்தை 3:44:72 நிமிட நேரத்தில் கடந்து முதல் தங்கத்தை வென்றாா். இது அவா் வெல்லும் 2-ஆவது பதக்கமாகும். அதே நேரத்தில் 800 மீ சாம்பியன் மஞ்சித் சிங் 3:46:57 நிமிட நேரத்தில் ஓடி 4-ஆவது இடத்தையே பெற முடிந்தது.

குண்டு எறிதல்: வெள்ளி

மகளிா் குண்டு எறிதலில் நடப்பு சாம்பியன் சீமா புனியாவும், சந்தீப் குமாரியும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனா். முதல் முறை 58.51 மீட்டரும், இரண்டாவது தவறாக எறிந்தும், மூன்றாவது முறை 62.26 மீ தூரம் எறிந்தாா் சீமா. 5-வது முறையும் தவறாக எறிந்தாா். 

இந்நிலையில் 6-ஆவது முறை 61.18 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றாா் புனியா. 

அவா் ஏற்கெனவே 2006, 2010, 2014 போட்டிகளிலும் பதக்கம் வென்றிருந்தாா். தற்போது தங்கத்தை இழந்து வெண்கலம் வென்றுள்ளாா். சந்தீப் குமாரி 54.61 மீ தூரம் மட்டுமே எறிந்து 5-ஆவது இடத்தைப் பிடித்தாா்.

மகளிா் 1500 மீ: வெள்ளி

1500 மீ. இறுதிச் சுற்றில் இந்தியாவின் சித்ரா, மோனிகா பங்கேற்றனா். இதில் சித்ரா சிறப்பாக பந்தய தூரத்தை 4:12:56 நிமிட நேரத்தில் கடந்து வெண்கலம் வென்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT