ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ரூ. 3 கோடி பரிசுத்தொகை: டுட்டி சந்தை ஊக்கப்படுத்தும் ஒடிஷா அரசு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டங்களில் இந்தியாவின் டுட்டி சந்த் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்...

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டங்களில் இந்தியாவின் டுட்டி சந்த் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இதனால் அவருக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 

22 வயதான டுட்டி சந்த், சமீபத்தில் நடைபெற்ற மகளிர் 100 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிச்சுற்றில் 11.32 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியப் போட்டியில் கடந்த 20 வருடங்களில் இந்தப் பிரிவில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது. இதையடுத்து நேற்று 200 மீ. ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

100 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற டுட்டி சந்துக்கு ரூ. 1.50 கோடி பரிசுத்தொகை அறிவித்தது நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஷா அரசு. இந்நிலையில் 200 மீ. ஓட்டத்தில் பதக்கம் வென்றதற்கும் மேலும் ரூ. 1.50 கோடி பரிசுத்தொகையை ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.  இதனால் இரு பதக்கங்கள் மூலமாக ரூ. 3 கோடி பரிசுத்தொகை பெற்றுள்ளார் டுட்டி சந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT