ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை: இறுதிப் போட்டியில் இந்திய வீரர்

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

DIN

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை 49 கிலோ எடை பிரிவு அரையிறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் அமித் பங்கல் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை எதிர்கொண்டார். இதில், தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் கடைசி 3 நிமிடங்களில் அமித் பங்கல் போட்டியை தன் பக்கம் திசை திருப்பி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். இவர், இறுதிப் போட்டியில்  உஸ்பெகிஸ்தான் வீரர் ஹசன்பாய் டஸ்மடோவை எதிர்கொள்கிறார்.  

ஹரியானாவைச் சேர்ந்த இவர், கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT