ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: 15-வது தங்கப் பதக்கம் வென்று இந்திய அணி சாதனை!

ஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்ஜ் விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது... 

எழில்

ஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. 

இந்திய ஆடவர் அணி பிரிவில் பிரனாப் பர்தன், ஷிப்நாத் சர்கார் ஆகிய இருவரும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள். இதன்மூலம் இந்திய அணி சாதனை நிகழ்த்த இருவரும் உதவியுள்ளார்கள். 

ஆசியப் போட்டியின் ஆரம்பத்தில் 1951-ல் இந்திய அணி அதிகபட்சமாக 15 தங்கப் பதக்கங்கள் வென்றது. அந்தச் சாதனையை இந்தியா தற்போது சமன் செய்துள்ளது. 

இந்த ஆசியப் போட்டியில் இந்திய அணி  15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT