ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

DIN

இந்தோனேஷியா ஜகார்த்தாவில் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் 132 தங்கம், 92 வெள்ளி மற்றும் 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தை பிடித்தது. 

இந்த நிறைவு விழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணிவகுப்பு நடத்தினர். இதில், இந்தியாவை மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் வழிநடத்தினார். இதையடுத்து, 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT