கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

ஓய்வு பெறுவாரா தோனி?: எதிர்பார்க்கும் பிசிசிஐ!

இனிமேலும் அவர் இந்திய அணிக்குத் தேர்வாவார் என எண்ணவில்லை. அதனால் ஓய்வு பெறுவது குறித்து...

எழில்

2019 உலகக் கோப்பைப் போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அரையிறுதிச்சுற்றில் நியூஸிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

இந்நிலையில் தனது ஓய்வு அறிவிப்பை தோனி வெளியிடுவதற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பிசிசிஐ உறுப்பினர் ஒருவர் பேசியுள்ளதாவது:

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னமும் முடிவு பெறாதது ஆச்சர்யம் அளிக்கிறது. ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளக் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பையிலேயே பார்த்தோம், முன்பு போல தோனியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை. 6-ம் நிலை, 7-ம் நிலை வீரராகக் களமிறங்கியும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இது அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவரைச் சேர்க்கும் திட்டம் இந்திய அணிக்கு இல்லை என்றுதான் எண்ணுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கெளரவமாக அவர் விடைபெறவேண்டும். தானாக இனிமேல் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

அவர் இனிமேல் சாதிக்க எதுவுமில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் நிரூபிக்க எதுவுமில்லை. இனிமேலும் அவர் இந்திய அணிக்குத் தேர்வாவார் என எண்ணவில்லை. அதனால் ஓய்வு பெறுவது குறித்து அவர் அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? .…... அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

ரவிக்கையின் சமூக மதிப்பென்ன? அங்கம்மாள் - திரை விமர்சனம்!

திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக நோட்டீஸ்!

திருப்பரங்குன்றம் போராட்டம்: நயினாா் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்கு

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

SCROLL FOR NEXT