உலகக் கோப்பை: நியூஸிலாந்து முதலில் பந்துவீச்சு!
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது...
6 முறை அரையிறுதிச் சுற்று, 1 முறை இறுதிச் சுற்றில் நுழைந்த போதிலும் இதுவரை கைகூடாத சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் கார்டிஃப் வேல்ஸ் மைதானத்தில் இன்றைய ஆட்டத்தில் மோதுகிறது நியூஸிலாந்து.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணியில் டிம் செளதி விளையாடவில்லை. நிகோல்ஸும் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அணியின் ஒரே சுழற்பந்து வீச்சாளராக சாண்ட்னர் உள்ளார். இலங்கை அணி நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.