முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

போராடித் தோற்ற வங்கதேசம்; தப்பித்த நியூஸிலாந்து: பரபரப்பான ஆட்டத்தின் விடியோ ஹைலைட்ஸ்!

வில்லியம்சன் 40, டெய்லர் 82 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தார்கள்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:09 AM
பகிர்:

நியூஸிலாந்து - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

வங்கதேச அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 64 ரன்களை விளாசினார். நியூஸிலாந்தின் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆடிய நியூஸிலாந்துக்கு வங்கதேச அணி கடுமையான சவாலை அளித்தது. 160 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தது நியூஸிலாந்து. ஆனால் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்களின் முயற்சியால் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்கிற நிலையை அடைந்தது  நியூஸிலாந்து. இதனால் ஆட்டம் பரபரப்பானது. எனினும் கடைசியில் 47.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது நியூஸிலாந்து. வில்லியம்சன் 40, டெய்லர் 82 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.