கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

விராட் கோலி, மிதாலி ராஜ் இணைந்து விளையாடும் டி20 ஆட்டத்துக்கு அனுமதியளிக்க பிசிசிஐ மறுப்பு!

டி20 கண்காட்சி ஆட்டம் ஒன்றில் விராட் கோலி, ஹர்மன்ப்ரீத் கெளர், மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி போன்ற...

எழில்

கடந்த சில மாதங்களாக கோலி, மிதாலி ராஜ் உள்ளிட்ட கலப்புப் பாலின வீரர்களின் டி20 ஆட்டம் ஒன்றில் விளையாடுவது குறித்த விளம்பரம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சமீபகாலமாக #ChallengeAccepted என்கிற பிரசாரத்தை முன்னிறுத்தி வருகிறது. அதன்படி டி20 கண்காட்சி ஆட்டம் ஒன்றில் விராட் கோலி, ஹர்மன்ப்ரீத் கெளர், மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி போன்ற சர்வதேச இந்திய வீரர், வீராங்கனைகள் ஒன்றிணைந்து விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டது. விளையாட்டுப் பானமான ராயல் சேலஞ்சு, இதற்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டது.

இதனால் முதல்முறையாக டி20 ஆட்டத்தில் ஆண், பெண் என இரு பாலினரும் விளையாடுவது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தக் கண்காட்சி ஆட்டத்துக்கு அனுமதியளிக்க பிசிசிஐ மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு, ஆர்சிபி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் கண்காட்சி ஆட்டத்தில் இடம்பெற பிசிசிஐயின் விதிமுறைகள் இடமளிக்கவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT