கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

சாம்பியன் டிராபி போட்டிக்குப் பிறகு 4-ம் நிலை வீரராக விளையாடியுள்ள இந்திய வீரர்களின் பட்டியல்!

இன்றைய ஆட்டத்தில், 4-ம் நிலை வீரராக விஜய் சங்கர் களமிறங்கியுள்ளார்...

எழில்

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக, ஷமி இடம்பெற்றுள்ளார். விஜய் சங்கரும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா, அஃப்தாப் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

புள்ளிகள் பட்டியலில் 7 புள்ளிகளுடன் இந்திய அணி 4-ம் இடத்திலும் புள்ளிகள் எதுவுமின்றி ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில், 4-ம் நிலை வீரராக விஜய் சங்கர் களமிறங்கியுள்ளார். 

இதன்மூலம், 2017 சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு 4-ம் நிலை வீரராகக் களமிறங்கியுள்ள 12-வது வீரராகியுள்ளார் விஜய் சங்கர்.

அதாவது 24 மாதங்களில் 12 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது இந்திய அணி. அவர்களின் பட்டியல்:

யுவ்ராஜ் சிங், தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல், விராட் கோலி, கெதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, எம்எஸ் தோனி, ரஹானே, அம்பட்டி ராயுடு, ரிஷப் பந்த், விஜய் சங்கர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஐசி பாலிஸி அறிமுக விழா

கோவாவில் சா்வதேச எரிசக்தித் துறை மாநாடு

தமிழகத்தில் நிகழாண்டில் 30 ஆதாா் சேவை மையங்கள் திறக்க திட்டம்

போத்தனூா் - சென்ட்ரல் ஒரு வழிச் சிறப்பு ரயில்: ஜன.18-இல் இயக்கம்

சீனா வழியே எவரெஸ்டை அடையும் திட்டம்: தமிழக இளைஞருக்கு அமைச்சா் பாராட்டு

SCROLL FOR NEXT