முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நடுவரின் முடிவு குறித்து ட்விட்டரில் வருத்தத்தைப் பதிவு செய்த ரோஹித் சர்மா!

தன் உணர்வின் வெளிப்பாடாக ட்வீட் செய்துள்ளார் ரோஹித் சர்மா. நேற்றைய ஆட்டத்தில் தான் அவுட் ஆன விதம் குறித்த தனது ...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:22 AM
பகிர்:

உள்ளங்கையை நெற்றியில் வைத்து ஐய்யோ ஐயோ என்று கடுப்பில் சொல்வது போன்ற ஒரு எமோஜி உண்டு தெரியுமா?

அதைத் தன் உணர்வின் வெளிப்பாடாக ட்வீட் செய்துள்ளார் ரோஹித் சர்மா. நேற்றைய ஆட்டத்தில் தான் அவுட் ஆன விதம் குறித்த தனது அதிருப்தியை இதன் மூலம் அவர் தெரிவித்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதின் மூலம் அரையிறுதிச் சுற்றையும் நெருங்கியுள்ளது இந்தியா.

இந்திய அணி பேட்டிங் செய்தபோது, 5 ஓவர்கள் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோச் வீசிய அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார் ரோஹித் சர்மா. ஆனால் கடைசிப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதலில் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் முறையீடு செய்தார் மே.இ. அணி கேப்டன். அதில் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவு கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் என பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியது. 

பந்து பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் சென்றது. விடியோவில் பார்க்கும்போது பந்து எதில் முதலில் பட்டது என்பது குழப்பமாக இருந்தது. ஆனால் பேட்டில் பட்டுத்தான் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது என்பது தெளிவாக இல்லை. இதனால் மூன்றாவது நடுவர், சந்தேகத்தின் அடிப்படையில் நாட் அவுட் என்றே அறிவித்திருக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைக் கூறியுள்ளார்கள். நடுவரின் முடிவைக் கண்டு ரோஹித் சர்மா மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ரித்திகாவும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில் ஆட்டம் முடிந்தபிறகு ட்விட்டரில் இந்தச் சர்ச்சை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா. தலையில் கை வைத்தபடி உள்ள எமோஜியை வெளியிட்டு இந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ஐசிசி விதிமுறைகளை மீறி நடுவரின் முடிவை விமரிசித்ததால் ரோஹித் சர்மா மீது ஐசிசி நடவடிக்கை எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.