கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

புற்றுநோய்க்கு இரண்டு வயது மகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

எழில்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிஃப் அலியின் இரண்டு வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமாகியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 அன்று ஆசிஃப் அலி ட்விட்டரில் இவ்வாறு கூறினார். என்னுடைய மகள் நான்காம் நிலை புற்று நோயால் அவதிப்படுகிறார். அவரை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஆசிஃப் அலியின் மகள் காலமாகியுள்ளார். 

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அலிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டபோது அவருடைய பெயர் இடம்பெறவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு அரை சதங்கள் அடித்தார். இதையடுத்து அவர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். இதுவரை அவர் 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ஆசிஃப் அலியின் மகளின் மரணத்துக்கு பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT