கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 421 ரன்கள் குவிப்பு: மிரட்டும் மேற்கிந்தியத் தீவுகள்

DIN


நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 421 ரன்கள் குவித்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது பயிற்சி ஆட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கெயில் தனது வழக்கமான டி20 பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்நது களமிறங்கிய ஹோப் அதிரடியாக ரன் குவிக்க அணியின் ரன் ரேட் 7-க்கு மேல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் அரைசதம் அடித்த லீவிஸ் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பிராவோ மற்றும் ஹெத்மயர் முறையே 25, 27 ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். எனினும், மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹோப் சதம் அடித்தார். அவரும் சதம் அடித்த கையோடு 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் ஹோல்டர் மற்றும் ரஸல் டி20 ஆட்டத்தைப் போல் அதிரடியாக விளையாட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் ரேட் உயர்ந்தது. ரஸல் தனது ஐபிஎல் ஃபார்மை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்தார். 

இதனிடையே ஜேஸன் ஹோல்டர் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே, 23-வது பந்தில் அரைசதம் அடித்த ரஸலும் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 370 ரன்களைக் கடந்து 8 விக்கெட்டுகளை இழந்த போதிலும், பிராத்வைட் மற்றும் நர்ஸ் கடைசி கட்டத்தில் மிரட்டினர். இதனால், அந்த அணி 400 ரன்களை கடந்தது. 

இதையடுத்து, பிராத்வைட் 16 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, ரோச் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், அந்த அணி 49.2 ஓவர்களில் 421 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நர்ஸ் 9 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT