உலகக் கோப்பை: பாகிஸ்தான் பேட்டிங்! மே.இ. அணியில் ரஸ்ஸல்!
டாஸ் வென்ற மே.இ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அலி இடம்பெறவில்லை...
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மே.இ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அலி இடம்பெறவில்லை. எவின் லூயிஸ், கேப்ரியல் ஆகியோர் முழு உடற்தகுதியை அடையவில்லை என்று கூறினார் மே.இ. அணி கேப்டன் ஹோல்டர். அந்த அணியில் ரஸ்ஸல் இடம்பெற்றுள்ளார்.