நாதன் லயன் படம் | ஐசிசி
கிரிக்கெட்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்த டாம் ஹார்ட்லியின் குறிப்புகள் உதவும்: நாதன் லயன்

டாம் ஹார்ட்லி கொடுத்த குறிப்புகள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்த உதவியாக இருக்குமென ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

DIN

டாம் ஹார்ட்லி கொடுத்த குறிப்புகள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்த உதவியாக இருக்குமென ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார். அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்தார். ஆனால், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் ஜெய்ஸ்வாலுக்கு சவாலளிக்கக் கூடியதாக இருக்கும். அதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது அதிரடி தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்த நிலையில், இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி கொடுத்த குறிப்புகள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்த உதவியாக இருக்குமென ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எதிராக நான் பந்துவீசியது கிடையாது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலானதாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் விளையாடியதை கூர்ந்து கவனித்தேன். அவர் விளையாடியது அற்புதமாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது குறித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லியுடன் பேசினேன். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவர் கையாண்ட யுக்திகள் குறித்து கேட்டறிந்தேன். அவரது குறிப்புகள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்த உதவியாக இருக்குமென நினைக்கிறேன் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய டாம் ஹார்ட்லி 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT