கே.எல்.ராகுல் கோப்புப் படம்
கிரிக்கெட்

ஓய்வை அறிவித்த கே.எல்.ராகுல்?  சர்ச்சையாகும் இன்ஸ்டா பதிவு! 

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

32 வயதாகும் கே.எல்.ராகுல் 50 டெஸ்ட் போட்டிகளில் 2863 ரன்களும் 77 ஒருநாள் போட்டிகளில் 2851 ரன்களும் 72 சர்வதேச டி20களில் 2265 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 4,683 ரன்கள் குவித்துள்ளார். 

கே.எல்.ராகுல் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தியுள்ளார். தற்போது இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார். 

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கே.எல்.ராகுல், “நான் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன். காத்திருங்கள்” எனக் கூறியிருந்தார்.

கே.எல்.ராகுல் பதிவு.

பின்னர் அவர் பதிவிட்டு நீக்கியதாக பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வைரலான  பதிவில் இருந்தது என்ன? 

”சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இருக்கிறேன். மிகவும் யோசித்த பிறகே இந்த முடிவினை எடுக்கிறேன். பல வருடங்கள் கிரிக்கெட் எனது வாழ்வில் முக்கியமான பாகமாக இருந்து வருகிறது. 

அணியினர், எனது குடும்பத்தினர், நண்பர்களென எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

கிரிக்கெட் களத்திலும் வெளியேவும் எனக்கு கிடைத்த அனுபவங்களும் நினைவுகளும் விலை மதிப்பற்றவை. எனது நாட்டை விளம்பரப்படுத்தி திறமையான பலருடனும் விளையாடியது மதிப்பு மிக்கதாக உணர்கிறேன். 

எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்க காத்திருக்கிறதென நானும் ஆவலுடன் இருக்கிறேன். கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு நொடியும் மிகவும் ரசித்தேன். இந்த அற்புதமான பயணத்தில் என்னுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி” என கே.எல்.ராகுல் பதிவிட்டதாக பலரும் ஸ்கிரீன் ஷாட்டுகளை பதிவிட்டுள்ளார்கள்.

இதன் உண்மைத் தன்மை குறித்து கே.எல்.ராகுல், பிசிசிஐ எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிலர் கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு திரும்புவதாகக் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT