முகப்பு
கிரிக்கெட்

இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு இடையே ஒரு நாள் ஓய்வு எதற்கு?

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு இடையில் ஒரு நாள் ஓய்வு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 3:32 PM
பகிர்:

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு இடையில் ஒரு நாள் ஓய்வு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் காரணமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு இடையில் ஒரு நாள் ஓய்வு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கை அதிபர் தேர்தலை கருத்தில்கொண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி 6 நாள்கள் நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டி 6 நாள்கள் நடத்தப்படவுள்ளது இது முதல் முறையல்ல. கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி முடிவடைய 6 நாள்கள் ஆனது. ஜிம்பாப்வே - இலங்கை இடையேயான அந்த டெஸ்ட் போட்டியில் பௌர்ணமி நாளன்று போட்டி நடைபெறாமல் ஓய்வு நாளாக விடப்பட்டது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →