ஜோ ரூட் படம் | AP
கிரிக்கெட்

33-வது சதம் விளாசிய ஜோ ரூட்; அலெஸ்டர் குக்கின் சாதனை சமன்!

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று (ஆகஸ்ட் 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். இருப்பினும், டேனியல் லாரன்ஸ் 9 ரன்களிலும், கேப்டன் ஆலி போப் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 47 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ஜோ ரூட்டுடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அவ்வப்போது பந்தினை பவுண்டரிக்கு விரட்டி அணியின் ரன்களை உயர்த்தினர். ஹாரி ப்ரூக் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இதன் மூலம், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய முன்னாள் வீரர் அலெஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அலெஸ்டர் குக் மற்றும் ஜோ ரூட் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் 33 சதங்கள் அடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்துள்ள வீரர்கள்

அலெஸ்டர் குக் - 33 சதங்கள்

ஜோ ரூட் - 33 சதங்கள்

கெவின் பீட்டர்சன் - 23 சதங்கள்

வால்லி ஹாம்மண்ட் - 22 சதங்கள்

காலின் கௌட்ரி - 22 சதங்கள்

ஜியாஃப்ரி பாய்காட் - 22 சதங்கள்

இயான் பெல் - 22 சதங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT