ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கான 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய மகளிரணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
ஆஸ்திரேலியா மகளிர் உடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
ஆஸி. சார்பில் அதிகபட்சமாக பேட்டர் ஜியார்ஜியா ஓல் 46 ரன்களும் போபியே லிட்சிஃபீல்டு 35 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.
இந்தியா சார்பில் பந்துவீச்சில் ரேணுகா தாகுர் சிங் 3, பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
5 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலியன் பந்துவீச்சாளர் மீகன் ஷட் ஆட்டநாயகி விருது பெற்றார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.