ரோஹித் சர்மா படம்: ஏபி
கிரிக்கெட்

கேள்விக்குள்ளாகும் ரோஹித்தின் தலைமைப் பண்பு..! புஜாரா அறிவுரை!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இந்திய வீரர் புஜாரா அறிவுரை வழங்கியுள்ளார்.

DIN

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் சராசரி 11.83ஆக இருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட பிஜிடி தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 3ஆவது போட்டி வரும் சனிக்கிழமை (டிச.14) பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

தொடக்க வீரராக களமிறங்கிவந்த ரோஹித் சர்மா தற்போது 6ஆவது இடத்தில் களமிறங்குகிறார். முதல் டெஸ்ட்டில் நன்றாக விளையாடிய கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

நியூசிலாந்துடனான தொடரை ரோஹித் தலைமையில் இந்திய அணி 0-3 என இழந்தது. பும்ரா தலைமையில் முதல்போட்டியில் வென்ற இந்திய அணி 2ஆவது டெஸ்ட்டில் ரோஹித் தலைமையில் தோல்வியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா செய்ய வேண்டியது என்ன?

இந்த நிலையில் புஜாரா கூறியதாவது:

ரோஹித் சர்மா முடிந்த அளவுக்கு விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில், அவரது ரன்கள் அவரது கேப்டன்சியை (தலைமைப் பண்பை)யும் பாதிக்கிறது. கேப்டன் ஃபார்மில் இல்லாதபோது அது கேப்டன்சியை நிச்சயம் பாதிக்கும்.

ரோஹித் சர்மா அனுபவமிக்க வீரர். பேட்டிங்கில் எப்படி ரன்கள் குவிக்க முடியுமென அவருக்குத் தெரியும். ஆனால், அவர் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு தேவை நல்ல தொடக்கம். முதல் 20-30 பந்துகளை சரியாக பார்த்து விளையாடினால் போதும். பிறகு, பெரிய ரன்களை அவரால் குவிக்க முடியும்.

அதனால், முதல் கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

ஹர்பஜன் சிங்கும் அறிவுரை

முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “கேப்டனாக ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க வேண்டுமென விரும்புகிறேன். ரன்கள் அடித்தால் அவரது சிந்தனை சிறப்பாக இருக்கும். இன்னும் பல விஷயங்களில் சிறப்பாக செயல்பட முடியும்.

எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவரது செயல்பாடுகள் குறித்து நிச்சயமாக வருந்துவார். ஒருவர் நன்றாக ரன்கள் அடிக்கும்போது சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும். அதனால், அவர் நன்றாக ரன்கள் குவித்து கேப்டன்சியை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன் என்றார்.

இந்தத் தொடரை இழந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதிபெற முடியாது. ரோஹித்தின் டெஸ்ட் கிரிக்கெட்டும் கேள்விக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT