விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்!
விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், தில்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான பிரித்வி ஷா விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி விஜய் ஹசாரே கோப்பை தொடர் தொடங்குகிறது.
இந்தியாவின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட 25 வயதான பிரித்வி ஷா, தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரையும் வியக்கவைத்தவர்.
இதையும் படிக்க..:ரன் குவிப்பின் மந்திரம் என்ன? கே.எல்.ராகுல் பேட்டி!
ஒழுக்கம் மற்றும் உடல்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ரஞ்சிக்கோப்பையில் பாதியில் மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா கலட்டிவிடப்பட்டிருந்தார். மேலும், அதன் தொடர்ச்சியாக ஐபிஎல்லிலும் அன்சோல்ட் ஆனார்.
இதுகுறித்து பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த ஸ்டோரியில், “சொல்லு கடவுளே, நான் இன்னும் என்ன பார்க்க வேண்டும்? 65 இன்னிங்ஸ்கள், 126 ஸ்ட்ரைக் ரேட் (விஜய் ஹசாரே தொடரில்) 55.7 சராசரியுடன் 3399 ரன்கள் எடுத்தால், நான் நல்ல ஆட்டக்காரன் இல்லையா?. ஆனால், நான் உங்கள் மீது என் நம்பிக்கையை வைத்திருப்பேன். மக்கள் இன்னும் என்னை நம்புகிறார்கள். ஏனென்றால் நான் நிச்சயமாக திரும்பி வருவேன். ஓம் சாய் ராம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க..:வர்ணனையாளர்கள் பாராட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேட்ச்!
ஷையத் முஷ்டாக் அலி தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற அஜிங்கியா ரகானே கடந்த விஜய் ஹசாரே தொடரில் கேப்டனாக இருந்தார்.
பிரித்வி ஷாவுடன் சேர்த்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஷாம் முலானியும் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டுள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் அணியில் இடம்பிடித்துள்ளார். மும்பை அணி டிசம்பர் 21 ஆம் தேதி கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் அகமதாபாத்தில் விளையாடவிருக்கிறது.
மும்பை அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்டா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், சித்தேஷ் லாட், ஹர்திக் தாமோர், பிரசாத் பவார் (விக்கெட் கீப்பர்), அதர்வா அன்கோலேகர், தனுஷ் கோட்டியன், ஷர்துல் தாகூர். ஜுனேத் கான், ஹர்ஷ் தன்னா, விநாயக் போர்