இந்தியா - பாகிஸ்தான் அணியினர்  கோப்புப்படம்
கிரிக்கெட்

இந்தியாவுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது: ஐசிசி!

இந்தியாவுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் நடக்கும் உலகக் கோப்பைத் தொடருக்குச் செல்லமாட்டோம் என்று தெரிவித்துவந்த நிலையில், இந்தப் பிரச்சினைகள் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தன.

இதையும் படிக்க..:2 ஆண்டுகளில் 4 போட்டிகள் மட்டுமே... விரக்தியாக இருக்கிறது! ஹேசில்வுட் பேட்டி!

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை வைத்துவந்தது. இந்த நிலையில், இந்தியாவுக்கான அனைத்து பொதுவான மைதானங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டு வரை நடக்கும் அனைத்துவிதமான ஐசிசி போட்டி தொடர்களிலும், பாகிஸ்தான்- இந்தியாவுக்கான போட்டிகள் இரு நாடுகளும் பொதுவான இடங்களில் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிசியும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க..:கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி, இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கான உலகக்கோப்பை, 2026 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை ஆகிய அனைத்திற்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தானில் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..: மன நிம்மதியாக இருக்கிறது..! ஓய்வு குறித்து அஸ்வின் பேட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT