கேசவ் மகராஜ் 
கிரிக்கெட்

கேசவ் மகராஜ் விலகல்: தெ.ஆ.வுக்கு பின்னடைவு!

பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து கேசவ் மகராஜ் விலகல்.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 2 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

டி20 தொடரை தென்னாபிரிக்க அணி வென்ற நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

இதையும் படிக்க |கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!

இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில் காயத்தால் விலகுவதாக கேசவ் மகராஜ் தெரிவித்துள்ளார். அவருக்கு பிஜோன் ஃபோர்டின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தால் விலகும் கேசவ் மகராஜ், டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்க்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. மேலும், ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும், லண்டனில் நடக்கும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

இதையும் படிக்க | உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள்..! பிசிசிஐ பகிர்ந்த விடியோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

மலைத்தேன்... அஞ்சு குரியன்!

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

SCROLL FOR NEXT