இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் புதியதாக இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
3 போட்டிகள் நடந்துமுடிந்துள்ள நிலையில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில் ஆஸி. அணி 4ஆவது டெஸ்ட்டுக்கான அணியை அறிவித்துள்ளது.
நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சாம் கொன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாதன் மெக்ஸ்வீனி தொடக்க வீரராக முதல் டெஸ்ட்டில் அறிமுகமாகினார். இதற்கு முன்பு தொடக்க வீரராக களமிறங்காத அவர் சுமாரான ரன்களே குவித்தார். ஆனால், கவாஜாவை விட மோசமாக விளையாடவில்லை.
புதிய சேர்ப்பு
சாம் கொன்ஸ்டாஸ், சீன் அப்பாட், பியூ வெப்ஸ்டர், ஜோஷ் இங்கிலிஷ், ஜாய் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 19 வயது சாம் கொன்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உஸ்மான் கவாஜா மட்டுமே அனுபவமுள்ள தொடக்க வீரராக இருக்கிறார்.
இளம் வயதில் அறிமுகமாகும் கொன்ஸ்டாஸ்
பாட் கம்மின்ஸுக்குப் பிறகு இளம் வயதில் பேக்கி கிரீன் தொப்பியை (ஆஸி. யில் அறிமுகமாகும் வீரர்களுக்கு வழங்குவார்கள்) வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்மின்ஸ் 2011இல் 18 ஆண்டுகள் 193 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமானார். கொன்ஸ்டாஸ் கடந்த அக்டோபர் 2இல் 19 வயதை கடந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (து.கே), சீன் அப்பாட், ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி (வி.கீப்பர்), ஜோஷ் இங்கிலீஷ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஜாய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.