ராபின் உத்தப்பா 
கிரிக்கெட்

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு வருங்கால வைப்பு நிதி முறைகேடு வழக்கில் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் உத்தாப்பா மீது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் செலுத்தாதல் இந்த கைதாணை பிறக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வைப்பு நிதியை செலுத்தாமல் மோசடி செய்ததற்காக ஏமாற்றுதல் என்ற காரணத்தினால் வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஷதாக்‌ஷ்ரி கோபாலா டிச.4ஆம் தேதி புலகேசி நகர் காவல்நிலையத்தில் உத்தப்பாவை கைது செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

நோட்டீஸ் ஒப்படைக்க காவல்துறையினர் ராபின் உத்தப்பாவின் வீட்டிற்குச் செல்லும்போது உத்தப்பா அங்கு இல்லை. தற்போது அவர் அங்கு வசிக்கவில்லை என்பது தெரியவருகிறது. அதனால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி முறைகேடு 1952 விதியின் படி பிரிவுகள் 7ஏ, 14பி, 7க்யூவின்படி இழப்பீடாக உத்தப்பா ரூ.26, 36, 602 தர வேண்டும். அத்துடன் ரூ.6,550 மீட்புத்தொகையாகவும் உத்தப்பா அளிக்க வேண்டுமென நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த நோட்டீஸில், “ ஏழை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அளிக்க முடியாமல் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராபின் உத்தப்பா 59 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். தற்போது, வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT