நாதன் மெக்ஸ்வீனி (கோப்புப் படம்) படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணைவார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!

ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அந்த அணியில் இடம்பிடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அந்த அணியில் இடம்பிடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார். ஆனால், அவர் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்படத் தவறினார். இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சுக்கு எதிராக மெக்ஸ்வீனி மிகவும் தடுமாறினார். 6 இன்னிங்ஸ்களில் 4 முறை பும்ராவின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

மீண்டும் இடம்பிடிப்பார்

தொடக்க ஆட்டக்காரராக சோபிக்காத மெக்ஸ்வீனி எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் சிறந்த நடுவரிசை ஆட்டக்காரராக இடம்பிடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மைக்கேல் வாகன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாதன் மெக்ஸ்வீனியைப் போன்று யாருக்கும் கிரிக்கெட் பயணம் கடினமாக தொடங்கியிருக்காது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு மெக்ஸ்வீனியின் கிரிக்கெட் பயணம் கடினமாக தொடங்கியுள்ளது. அவருக்காக நான் வருத்தப் படுகிறேன். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருக்கும் கொடுக்கப்படாத மிகப் பெரிய சவால் அவருக்கு வழங்கப்பட்டது. பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட் செய்தது, பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது போன்ற சவாலான விஷயங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மெக்ஸ்வீனி அணியில் இடம்பெறுவார் என நினைத்தேன். அந்தப் போட்டியில் அவர் சரியாக விளையாடாத பட்சத்தில், அணியில் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எண்ணினேன். மெக்ஸ்வீனி அணியிலிருந்து நீக்கப்பட்டத்தை அவருக்கு பின்னடைவாக நான் பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் இந்த முடிவு மெக்ஸ்வீனிக்கு எதிர்காலத்தில் நன்மையானதாகவே அமையும். அவர் எதிர்காலத்தில் 4-வது அல்லது 5-வது வீரராக களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் என்றார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மெக்ஸ்வீனி, 6 இன்னிங்ஸ்களில் 10, 0, 39, 10, 9 மற்றும் 4 ரன்கள் முறையே எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா 8, 4, 13, 9, 21 மற்றும் 8 ரன்கள் முறையே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT