வார்னர், கான்ஸ்டாஸ் கோப்புப் படங்கள்
கிரிக்கெட்

கான்ஸ்டாஸ் வார்னரின் ‘குளோன்’ இல்லை: கிரேக் சேப்பல்

இளம் ஆஸி. வீரர் கான்ஸ்டாஸ் வார்னரின் குளேன் இல்லை என முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

DIN

இளம் ஆஸி. வீரர் சாம் கான்ஸ்டாஸ் முன்னாள் ஆஸி. டேவிட் வார்னரின் குளேன் இல்லை என கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் மெல்போர்னில் அறிமுகமாகிறார்.

1993இல் ரிக்கி பாண்டிங் அடித்ததுபோல் ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் கான்ஸ்டாஸ் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

சாம் கொன்ஸ்டாஸ் 468ஆவது ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரராக களமிறங்கவுள்ளார். இதற்கு முன்பு இளம் வயதில் (18 வயதில்) பாட் கம்மின்ஸ் 2011இல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நாதன் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக சாம் கான்ஸ்டாஸ் அணியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

மனத்திட்பமும் திறமையும்

இந்த நிலையில் ஆஸி. முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கூறியதாவது:

19 வயதில் கான்ஸ்டாஸ் விளையாடுவது வரலாற்றில் செங்குத்துப்பாறையாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட்டில் தொடக்க வீரராக களமிறங்கும் இளம் வீரராக இருக்கிறார். அதிலும் பாக்ஸிங் டே போட்டியில் களமிறங்குவது ஆச்சரியமாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது. ரன்கள் அடிக்கவும் தகவமையவும் கான்ஸ்டாஸுக்கு மனத்திட்பமும் திறமையும் இருக்கிறது.

தேர்வுக்குழுவினரின் வேலை சாம்பியன் ஆகக்கூடிய திறமை உள்ளவர்களை தேர்வுசெய்வதேயாகும். ரன்கள் அடிப்பவர்களை தேர்வு செய்யக்கூடாது. நீங்கள் சரியான வீரரை தேர்ந்தெடுத்து, பாதியில் நீக்கினாலும் அவர்களுக்கு தேவையானதை கற்று மீண்டும் வலுவாக வருவார்கள்.

கான்ஸ்டாஸ் வார்னரின் குளோன் இல்லை

கான்ஸ்டாஸ் வார்னரின் குளோன் இல்லை. இயற்கையாகவே அவருக்கு அடுத்து அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது ஆடத்தின் சிறப்பே அதிரடியும் பாதுகாப்பாக விளையாடுவதும்தான். அந்த சமநிலைதான் அவரை எந்தவிதமான பந்துவீச்சில் இருந்தும் வெற்றிபெற வைக்கிறது.

வார்னரின் பாணி துணிச்சலாக அதிரடியாக விளையாடுவது. கான்ஸ்டாஸ் திட்டமிட்டு ரிஸ்க் எடுப்பவர். இதற்காக கான்ஸ்டாஸுக்கு திறமையில்லை எனக் கூறமுடியாது, அவரது திறமை அடிப்படையான கிரிக்கெட் ஷாட்டுகளுடன் பிணைந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT