ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சாம் கரண்.  படம்: ஏபி
கிரிக்கெட்

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாம் கரண் புதிய சாதனை!

இங்கிலாந்து வீரர் சாம் கரண் டி20யில் நிகழ்த்திய சாதனை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்து வீரர் சாம் கரண் சர்வதேச டி20யில் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த ஹாட்ரிக் மூலம் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சாம் கரண் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

போட்டியின் 16ஆவது ஓவரை வீசிய சாம் கரண் இலங்கையின் கேப்டன் தசுன் ஷனாகா, தீக்‌ஷனா, மதீஷா பதிரானாவை விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் இலங்கை 16.2 ஓவர்களில் 133க்கு ஆல் அவுட்டானது.

மழையின் காரணமாக 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 125/4 ரன்கள் எடுத்து டிஎல்எஸ் விதியின்படி வென்றது.

சாம் கரண் இதற்கு முன்பாக லீக் போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியிருக்கிறார்.

சாம் கரணின் ஹாட்ரிக் விக்கெட்டுகள்

1. 2019, கிங்ஸ் லெவன் பஞ்சாப் - தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக (ஐபிஎல்)

2. 2024, ஓவல் இன்வின்சிபிள் - லண்டன் ஸ்பிரிட் ( தி ஹண்ட்ரட்)

3. 2026, இங்கிலாந்து - இலங்கைக்கு எதிராக (சர்வதேச டி20)

England player Sam Curran has impressed by taking a hat-trick of wickets for the first time in international T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

ஞாயிறு பட்ஜெட்.. முந்தைய நாளில்!

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. மறக்காமல் இதைச் செய்ய வேண்டும்!

காங்கோவில் சுரங்கம் சரிந்து விபத்து: 200 பேர் பலி!

SCROLL FOR NEXT