சதமடித்த மகிழ்ச்சியில் ஆஸி. வீரர்.  படம்: ஐசிசி
கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை: அதிவேக சதமடித்து ஆஸி. வீரர் புதிய சாதனை!

யு19 உலகக் கோப்பையில் புதிய சாதனை நிகழ்த்திய ஆஸி. வீரர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

யு19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்சுக் (18 வயது) அதிவேகமாக சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

யு19 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜப்பான் பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஜப்பான் அணி 201/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 204/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் வில் மலாஜ்சுக் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வில் மலாஜ்சுக் 51பந்துகளில் சதமடித்து புதிய சாதனையை படைத்தார்.

யு19 உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்தவர்கள்

1. வில் மலாஜ்சுக் - 51பந்துகள் (ஆஸ்திரேலியா, 2026 )

2. காசிம் அக்ரம் - 63 பந்துகள் (பாகிஸ்தான், 2022)

3. ராஜ் பாவா - 69 பந்துகள் (இந்தியா, 2022)

4. விரன் சமுடிதா - 75 பந்துகள் (இலங்கை, 2026)

5. ஜார்ஜ் வான் ஹீர்டன் - 89 பந்துகள் (தெ.ஆ. 2022)

U19 World Cup: Malajczuk's fastest record ton sets up Australia's biggest win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் ஏற்றம்!

வாக்குகளுக்காக தேநீர் விற்பவர் என பொய்ப் பிரசாரம்: பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு

குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள... முகாம் அறிவிப்பு!

தனுஷ் - 55 புதிய அறிவிப்பு!

சாம்பியன்ஸ் லீக்: பெட்ரிக்கு காயம், பார்சிலோனாவுக்கு முக்கியமான வெற்றி!

SCROLL FOR NEXT