டி20 உலகக் கோப்பை வென்ற 2021 ஆஸ்திரேலிய அணியில் இருந்த வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சார்ட்சன் (34 வயது) தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறும் வேளையில், இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
34 வயதாகும் ரிச்சார்ட்சன் தனது யார்க்கர் பந்துவீச்சினால் கவனம் ஈர்த்தார்.
25 ஒருநாள், 36 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 39 , டி20 போட்டிகளில் 49 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
காயம் காரணமாக தனது முழுமையான கிரிக்கெட் பயணத்தைத் தொடர முடியாமல் இருந்தார்.
பிபிஎல் தொடரில் 142 விக்கெட்டுகளு எடுத்து அசத்தியவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.