முகப்பு
கிரிக்கெட்

நால்வர் அரைசதம்: முதல்நாள் முடிவில் 300 ரன்களை கடந்த ஆஸி.

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 300 ரன்களை கடந்துள்ளது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 7:25 AM
ஆஸி. வீரர்கள் நால்வர் அரைசதம்
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 311 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 72 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பாக பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஜடேஜா, வாஷிங்டன், ஆகாஷ் தீப் தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

3 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ள நிலையில் 4ஆவது டெஸ்ட் முக்கியத்துவம் பெறுகிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படும் இது மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்திய நேரப்படி 12. 33 மணிக்கு 86 ஓவர் முடிவில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

6 விக்கெட்டுகள் இழப்பில் ஆஸ்திரேலிய அணி 311 ரன்கள் குவித்தது. ஸ்மித், கம்மின்ஸ் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதில் லபுஷேன், கவாஜா, ஸ்மித், கான்ஸ்டாஸ் அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

ஸ்கோர் கார்டு:

சாம் கான்ஸ்டாஸ் - 60

உஸ்மான் கவாஜா - 57

மார்னஸ் லபுஷேன் - 72

ஸ்டீவ் ஸ்மித் - 68*

டிராவிஸ் ஹெட் - 0

மிட்செல் மார்ஷ் - 4

அலெக்ஸ் கேரி - 31

பாட் கம்மின்ஸ் - 8*

முழு கட்டுரையைப் படிக்க →