முகப்பு
கிரிக்கெட்

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 8:23 PM
இந்திய வீரர்கள் - படம் | டிசிசிஐ (எக்ஸ்)
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2024 at 8:08 PM

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரானது ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளதாக மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 26 டிசம்பர், 2024 at 8:20 PM

இந்தியா தவிர்த்து, இந்த தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

இது தொடர்பாக டிசிசிஐ செயலர் ரவி சௌகான் கூறியதாவது: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கலந்துகொள்ளவுள்ளது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையான தருணம். கொழும்புவில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடர் நமது வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு என்பதையும் உணர்த்துகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.