நிதீஷ் குமார் ரெட்டி, அல்லு அர்ஜுன் 
கிரிக்கெட்

புஷ்பா பட பாணியில் கொண்டாடிய நிதீஷ் குமார் ரெட்டி!

இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது அரைசதத்தினை புஷ்பா பட பாணியில் கொண்டாடியது வைரல்.

DIN

இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது அரைசதத்தினை புஷ்பா பட பாணியில் கொண்டாடியது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3ஆம் நாள் முடிவிக் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தினை நிறைவுசெய்தார். சதமடித்து கொண்டாடிய விதமும் சிறப்பாக இருந்தது.

அரைசதம் அடித்து புஷ்பா பட பாணியில் பேட்டினை வைத்து தாடியை வருடுவதுபோல செய்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரூ.1,700 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல்நாள் காட்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். தற்போது வழக்கு விசாரணையில் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.2 கோடி படக்குழு சார்பாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நிதீஷ்குமார் ரெட்டி விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தவெக மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

இசைக்கலைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT