டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, நாதன் லயன் முந்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அஸ்வினை முந்திய நாதன் லயன்
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் முந்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முடிவில், நாதன் லயன் டெஸ்ட் போட்டிகளில் 538 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. அந்தப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.