மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மகளிர் ஆசியக் கோப்பை,2024 தொடங்கவுள்ளது. அனுமதி இலவசம் எனப் பதிவிடப்பட்டுள்ளது
இந்திய மகளிரணி அதன் முதல் போட்டியில் வருகிற ஜூலை 19 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.