மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலை பிரபல மூத்த இந்திய நடிகரான அனுபம் கெர் சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவரும் துபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளனர். கிறிஸ் கெயிலை சந்தித்தது தொடர்பாக அனுபம் கெர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: துபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் அன்பானவர் மற்றும் உற்சாகமானவர். உங்களிடம் மிகப் பெரிய ஆற்றல் இருக்கிறது. நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்பதை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அதனைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஜெய் ஹோ எனக் கூறியுள்ளார்.
விடியோவுடன் கூடிய இந்தப் பதிவை அனுபம் கெர் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, அதிக அளவில் ரசிகர்கள் ஹார்ட் எமோஜிக்களை கமெண்டில் அனுப்பியும் அந்தப் பதிவை அதிக அளவில் பகிர்ந்தும் வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.