இலங்கை சிறுமிக்கு செல்ஃபோன் பரிசளித்த ஸ்மிருதி மந்தனா படங்கள்: இலங்கை கிரிக்கெட் / எக்ஸ்
கிரிக்கெட்

இலங்கை சிறுமிக்கு செல்ஃபோன் பரிசளித்த ஸ்மிருதி மந்தனா!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இலங்கை ரசிகைக்கு செல்ஃபோனை பரிசளித்தார்.

DIN

இந்திய கிரிக்கெட்வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இலங்கை ரசிகைக்கு செல்ஃபோனை பரிசளித்தார்.

ஆசியக் கோப்பை மகளிர் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேற்று (ஜூலை 19) மோதின. இதில் பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

இந்திய அணி 85 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டினை இழந்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி 14.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகு இலங்கை ரசிகைக்கு புதிய செல்ஃபோனை பரிசளித்தார் ஸ்மிருதி மந்தனா. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

SCROLL FOR NEXT