முகப்பு
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: ஹாரி ப்ரூக் சதம்; இங்கிலாந்து 307 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின்போது 307 ரன்கள் முன்னிலை பெற்றது.

Updated On : 21 ஜூலை, 2024 at 1:04 PM
- படம் | AP
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின்போது 307 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் சதம் விளாசி அசத்தினார். அவர் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். உணவு இடைவேளையின்போது, மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இங்கிலாந்து அணி 307 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

ஜோ ரூட் 81 ரன்களுடன் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.