முகப்பு
கிரிக்கெட்

இருவர் அரைசதம்: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 21 ஜூலை, 2024 at 10:37 AM
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 21) நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரிச்சா கோஷ் அதிரடியாக 29 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் கவிஷா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சமைரா மற்றும் ஹாட்சந்தனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →