இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 23) அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 23) அறிவித்துள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 27 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 23) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டி20 போட்டி ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் நிலையில், இரண்டாவது டி20 போட்டி ஜூலை 28 ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜூலை 30 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி விவரம்
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் பெரேரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, சமிந்து விக்கிரமசிங்க, மதீஷா பதிரானா, நுவான் துஷாரா, துனித் வெல்லாலகே, துஷ்மந்தா சமீரா மற்றும் பினுரா ஃபெர்னாண்டோ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.