இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இலங்கை அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் 16 பேர் இடம் பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை டி20 கேப்டனாக இருந்த ஸ்பின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, கடந்த மாத டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை தொடக்க நிலையிலேயே வெளியேறியதை அடுத்து ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து ஏற்கெனவே கேப்டன்சி அனுபவம் உள்ள அசலங்கா, டி20 அணிக்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை மோதும் டி20 ஆட்டங்கள் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளன. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி, திங்கள்கிழமை இரவு இலங்கை சென்றடைந்தது.
அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் பெரெரா (வி.கீ.), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (வி.கீ.), தினேஷ் சண்டிமல், கமிண்டு மெண்டிஸ், தசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெலாலகே, மஹீஷ் தீக்ஷனா, சமிண்டு விக்ரமசிங்கே, மதீஷா பதிரானா, நுவன் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ.
இதிலிருந்து ஏற்கனவே சமீரா வெளியேறியுள்ள நிலையில் தற்போது நுவன் துஷாரா காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
ஃபீல்டிங் பயிற்சியின்போது இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதை இலங்கை அணியின் மேலாளர் மஹிந்த ஹலன்கோடாவும் உறுதி செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நுவன் துஷாரா 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவரும் மலிங்கா ஸ்டைலில் பந்து வீசுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மதீஷா பதிரானா இப்படி பந்து வீசி பிரபலமானார்.
இவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.