டிராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல் படங்கள்: வாஷிங்டன் ஃபீரிடம் / எக்ஸ்
கிரிக்கெட்

ஹெட், மேக்ஸ்வெல் அதிரடி: இறுதிப் போட்டிக்கு தேர்வானது வாஷிங்டன் ஃபீரிடம் அணி!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு தேர்வானது ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபீரிடம் அணி.

DIN

அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன.

இதில் வாஷிங்டன் ஃபீரிடம் என்ற அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இன்று காலை நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றில் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபீரிடம் அணியும் கம்மின்ஸ் தலைமையிலான சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி 19 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் அணியில் ரச்சின் ரவீந்திரா 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய வாஷிங்டன் ஃபீரிடம் அணி 15.3 ஓவரில் இலக்கை எட்டி (149/3) அபார வெற்றியடைந்தது. ஹெட் 77*, மேக்ஸ்வெல் 54* வெற்றிக்கு வித்திட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT