இந்தியாவுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா!
மனம் திறந்த நியூசிலாந்து கேப்டன்
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேசியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து, தற்போது நாங்கள் டெஸ்ட் தொடரை முழுமையாக வெற்றி பெற்றது வரை நியூசிலாந்து அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். மும்பையில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே இந்திய அணிக்கு நாங்கள் சவாலளித்தோம். இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
போட்டிகள் நடைபெற்ற மைதானங்களின் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு, நியூசிலாந்து வீரர்கள் தங்களை வேகமாக மாற்றிக் கொண்டனர். பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கடந்த வாரம் மிட்செல் சாண்ட்னர் அணியின் வெற்றிக்கு உதவினார். மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் அஜாஸ் படேல் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவினார். இந்தியாவுக்கு வந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம் என்றார்.
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முழுமையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றுள்ள முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.