இந்திய வீரர்கள் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

ஆஸி.க்கு எதிரான தொடரில் இவர்கள் இருவரும் மிக முக்கியம்: இந்திய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு வீரர்களை முக்கியமானவர்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு வீரர்களை முக்கியமானவர்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கே.எல்.ராகுல் தேவை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதன் தன்மை மாறாமல் விளையாடக் கூடிய வீரர்களான கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் இந்திய அணிக்கு முக்கியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ராபின் உத்தப்பா (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய வீரர்கள் தேவை. அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மை மாறாமல் அதற்குரிய பாரம்பரியத்துடன் விளையாட வேண்டும். தற்போது இந்திய அணியில் அதுபோன்ற ஆட்டத்தை கே.எல்.ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற வீரர்கள் யாரும் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கவில்லை.

கே.எல்.ராகுல் (கோப்புப் படம்)

அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற மனநிலையில் விளையாடுகின்றனர். ஷுப்மன் கில்லை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர். அவரை பொறுமையாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக் கூறினால், அவருக்கு அது பிடிக்காமல் போகலாம். அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்படலாம். டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அணியில் சேர்க்கப்படலாம். அவர் மிகச் சிறந்த வீரர் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT