2-வது டி20: ஜோஸ் பட்லர் அசத்தல்; இங்கிலாந்து வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி பார்படாஸில் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது இங்கிலாந்து.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பௌவல் 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரோமாரியோ ஷெப்பர்டு 22 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 14 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: இந்திய அணியை பும்ரா கேப்டனாக வழிநடத்துவார்; பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கம்பீர்!
இங்கிலாந்து தரப்பில் சாக்யூப் மஹ்முத், மௌஸ்லி மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
2-வது வெற்றி
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தித் தீவுகளை வீழ்த்தியது. இங்கிலாந்து அணியில் முதல் போட்டியில் சதம் விளாசிய பில் சால்ட் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வில் ஜாக்ஸ் 38 ரன்களும், லியம் லிவிங்ஸ்டன் 23 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.