பார்த்திவ் படேல்  படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்
கிரிக்கெட்

குஜராத் டைட்டன்ஸுக்கு பயிற்சியாளராக பார்த்திவ் படேல் நியமனம்!

குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் துணைப் பயிற்சியாளராகவும் பார்த்திவ் படேல் நியமிக்கப்படுள்ளார்.

DIN

இந்திய கிரிக்கெட் வீரர் பார்திவ் படேல் தனது 35ஆவது வயதில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றார்.

ஒருநாள் போட்டிகளில் 38 ஆட்டங்களில் 736 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 அரைசதங்களும், அதிகபட்ச ஸ்கோரான 95-ம் அடக்கம். 25 டெஸ்ட்டில் 934 ரன்கள் ரன்கள்.

முதல்தர கிரிக்கெட்டில் 194 ஆட்டங்களில் விளையாடியுள்ள பார்த்திவ் படேல், அவற்றில் 11,240 ரன்கள் விளாசியுள்ளார். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய இளம் வீரர்களில் பார்த்திவ் படேலும் ஒருவர்.

தோனியின் வருகைக்குப் பிறகு 2-ஆவது விக்கெட் கீப்பராகவும், அவ்வப்போது பேட்ஸ்மேனாகவும் திருப்தியாகவே பணியாற்றினார் பார்த்திவ் படேல்.

மீண்டும் அவர் சோபிக்கத் தொடங்கிய நிலையில் அவருக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. உள்நாட்டு போட்டிகளில் குஜராத் அணி சிறப்பான நிலையை எட்டுவதற்கு பார்த்திவ் படேலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் துணைப் பயிற்சியாளராகவும் பார்த்திவ் படேல் நியமிக்கப்படுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதபுரத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை: சென்சார் பதிந்த கால்பந்து அறிமுகம்!

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய பாஜக கவுன்சிலர் மனு நிராகரிப்பு!

SCROLL FOR NEXT