பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?
இந்தியா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி வரும் நவ.22ஆம் தேதி பெர்த் ஆடுகளத்தில் தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு இந்தியா ஏ அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்திய அணி முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்களைப் பெற்றன.
Advertisement
Advertisement
இந்தப் பயிற்சி ஆட்டம் பார்வையாளர்கள் இன்றி மூடிய ஆடுகளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலிக்கும் காயம் ஏற்பட்டதால் ஸ்கேன் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைவான ரன்களே எடுத்து ஆட்டமிழந்த விராட் கோலி வலைப் பயிற்சியில் மீண்டும் களமிறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.