கே.எல்.ராகுல் (கோப்புப் படம்) படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு: கே.எல்.ராகுல்

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் சில மாதங்களாக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஃபார்ம் மீதான விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும், கே.எல்.ராகுல் சிறந்த வீரர் எனவும், இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது எனவும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் ராகுலுக்கு ஆதரவாக பேசினர்.

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல், இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஃபார்ம் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த டெஸ்ட் தொடர் அவருக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

டி20 அணியில் இடம்பிடிப்பதே இலக்கு

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கே.எல்.ராகுல், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு. அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரராக இருப்பதையே எப்போதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளேன்.

இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதை இன்னும் விரும்புகிறேன். சில காலமாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாமலிருக்கிறேன். ஒரு வீரராக நான் எங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு திரும்ப வேண்டும். மீண்டும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற, வருகிற ஐபிஎல் தொடர் எனக்கு உதவியாக இருக்கும் என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் செஞ்சூரியனில் தென்னப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் கடைசியாக சதம் அடித்திருந்தார். அதன் பின், 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், இரண்டு அரைசதங்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT